Memorandum by Maymai மேன்மை:

Maynmai
14 min readDec 15, 2020

Tamil Diaspora Activists on Immigrant Rights Concerns Stemming from U.S. Supreme Court Case Department of Homeland Security v. Thuraissigiam

உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் (DHS) எதிர் துரைசிங்கம் அமெரிக்க உச்சநீதிமன்ற வழக்கினை ஒட்டி எழும் கரிசனைகள் குறித்துப் புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்கள்

Overview

சுருக்கம்

The June 25, 2020 United States Supreme Court decision against Mr. Vijayakumar Thuraissigiam, a Tamil asylum seeker fleeing persecution and state-sanctioned violence in Sri Lanka, highlights the need to defund law enforcement while halting deportations immediately. Through a series of authoritarian measures which undermine settled law, the Trump Administration is eviscerating protections for all asylum seekers, placing them at risk for the Administration’s political gain. In proposing and enacting these measures, the U.S. is complicit in the overseas murders of those who were seeking safety.

இலங்கையின் அரச வன்முறை மற்றும் துன்புறுத்தலில் இருந்து தப்பித்து வெளியேறி அகதித்தஞ்சம் கோரியிருக்கும் திரு. விஜயகுமார் துரைசிங்கத்துக்கு எதிராக ஜூன் 25, 2020 அன்று ஐக்கிய அமெரிக்க உயர் நீதிமன்று (சுப்ரீம் கோர்ட்) வழங்கிய தீர்ப்பானது திருப்பியனுப்புதலை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதுடன் சட்ட அமலாக்கல் துறைக்கான நிதிவழங்கலைத் துண்டிக்க வேண்டியிருப்பதன் தேவையைப் புலப்படுத்துகிறது. குடியேற்றச் சட்டத்தைத் தளம்பச் செய்யும் தொடர் முன்னெடுப்புகள் மூலம் ட்ரம்ப் நிர்வாகமானது தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கென வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை இல்லாதொழிப்பதுடன், தம் நிர்வாகத்தின் அரசியல் இலாபம் கருதி அவர்களை ஆபத்துக்குள் தள்ளுகிறது. இந்த முன்னெடுப்புகள் மற்றும் பரிந்துரைகள் வழியாக, ஐக்கிய அமெரிக்க அரசானது தஞ்சம் கோரியோர் வெளிநாடுகளில் கொல்லப்படுவதற்கு உடந்தையாகவிருக்கிறது.

This memo outlines the Supreme Court Decision’s deeper context, its grave implications both domestic and international, and the demands made to counter its impact.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினுடைய ஆழமான பின்னணியையும், அதன் பாரதூரமான உள்நாட்டு மற்றும் சர்வதேச அர்த்தங்களையும் எடுத்துச்சொல்வதுடன், அந்த விளைவுகளை எதிர்கொள்ளத் தேவையான கோரிக்கைகளையும் இக் குறிப்பாணை முன்வைக்கிறது.

Background

பின்னணி

Department of Homeland Security v. Thuraissigiam was a U.S. Supreme Court case questioning whether the Illegal Immigration Reform and Immigrant Responsibility Act of 1996, which limits habeas corpus judicial review of the decisions of immigration officers, violates the Suspension Clause of Article One of the U.S. Constitution. In a devastating 7–2 opinion, the Court majority ruled that the law does not violate the suspension or due process clauses. Five justices ruled the law specifically did not violate the Suspension Clause, with Justices Breyer and Ginsburg filing an opinion concurring with the judgment. The dissenting opinions were filed by Justices Sotomayor and Kagan.

குடிவரவு அலுவலர்கள் எடுக்கும் முடிவுகளை ஆட்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ்) மூலம் மீள்பரிசீலிக்கக்கூடிய நீதி மேன்முறையீட்டு முறைமையைத் தடுக்கும் 1996 சட்டவிரோதக் குடியேற்றச் சீர்திருத்தம் மற்றும் குறியேறியவரின் பொறுப்புச் சட்டமானது ஐக்கிய அமெரிக்க தேசத்து அரசியல் அமைப்பு முதலாம் பிரிவின் இடைநீக்கல் கூற்றினை மீறுகிறதா என வினவிய ஒரு வழக்கே உள்நாட்டுப் பாதுகாப்பு திணைக்களம் (DHS) எதிர் துரைசிங்கம் என்கிற ஐக்கிய அமெரிக்க உச்சநீதிமன்ற வழக்கு ஆகும்.குறித்த சட்டமானது இடைநீக்கல் கூறையோ தக்க வழிமுறையையோ மீறியிருக்கவில்லையென மிகவும் கேடான 7–2 அபிப்பிராய வித்தியாசத்தில் கோர்ட் பெரும்பான்மை தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் ப்ரேயர் மற்றும் கின்ஸ்பெர்க் தீர்ப்புடன் ஒத்திசைவாகவே தமது அபிப்பிராயங்களைச் சமர்ப்பித்திருந்தார்கள். மாறுபடும் அபிப்பிராயங்களை நீதிபதிகள் சொட்டோமாயர் மற்றும் கீகன் ஆகியோர் சமர்ப்பித்திருந்தனர்.

In the case of Mr. Thuraissigiam, despite communication barriers due to inadequate translation, the U.S. asylum officer believed Mr. Thuraissigiam’s story — however, the officer failed to understand the political context Mr. Thuraissigiam was fleeing and thus, rejected his request. This is an egregious error; it was the legal duty of the asylum officer to understand Sri Lanka’s political context. Even in their decision, Justice Breyer, joined by Justice Ginsburg, listed a number of situations in which habeas review must be available, including in the case of someone claiming an asylum officer made an egregious error.

திரு. துரைசிங்கத்தின் வழக்கில் போதிய மொழிபெயர்ப்பு இன்மையால் தடைகள் இருந்தபோதும், அமெரிக்கத் தஞ்சக்கோரிக்கைப் பிரிவு அலுவலர் துரைசிங்கத்தின் கதையைச் சந்தேகிக்கவில்லை. ஆனாலும் கூட, அந்த அலுவலர் துரைசிங்கம் தப்பி வெளியேறவேண்டியிருந்த அரசியல் பின்னணியைப் புரிந்துகொள்ளத் தவறியதால் கோரிக்கையை நிராகரித்திருந்தார். இது மிகவும் பாரதூரமான தவறாகும். இலங்கையின் அரசியல் பின்னணியைப் புரிந்துவைத்திருப்பது அந்த அலுவலருக்கு இடப்பட்ட சட்டரீதியான கடமை. நீதிபதிகள் கின்ஸ்பெர்க்-உம் ப்ரையரும் தங்களுடைய தீர்ப்பில் ஆட்கொணர்வு மீள்பரிசீலனை செய்யப்படக்கூடிய சில சந்தர்ப்பங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள். அப்பட்டியலில் தஞ்சக் கோரிக்கை அலுவலர் பாரதூரமான தவறைப் புரிந்திருக்கிறார் என்கிற குற்றச்சாட்டும் உள்ளடங்கும்.

This decision opens the door for the Trump Administration’s recent decision to implement “expedited removal” procedures for asylum seekers who do not pass initial screening. As Justices Sotomayor and Kagan wrote, the decision “flouts a century of this Court’s practice” and is of grave concern. The Supreme Court ruling that Mr. Thuraissigiam did not have the right to contest a flawed asylum decision in court has serious consequences not only for Mr. Thuraissigiam, but also for other asylum seekers regardless of nationality and background. This serves as a huge win for the Trump administration and advances authoritarianism by diminishing judicial review.

முதல் ஸ்க்ரீனிங்-ஐக் கடக்க முடியாத தஞ்சக்கோரிக்கையாளர்களை ‘விரைந்து நாடுகடத்தும்’ வழிவகைகளை அமுல்படுத்த விழையும் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு இத்தீர்ப்பு சாதகமாக அமைகிறது. நீதிபதிகள் சோட்டோமேயர் மற்றும் காகன் எழுதியது போல, இத் தீர்ப்பு ‘நூற்றாண்டுகால நீதிமன்ற வழக்கை ஊதாசீனம் செய்கிறது’. அத்துடன் கூடவே மிகவும் வருந்தத்தக்க ஒன்றுமாகும். ஒரு பிழையான தஞ்சக்கோரிக்கை முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்ய திரு. துரைசிங்கத்துக்கு உரிமை கிடையாதென உச்சநீதிமன்று வழங்கிய இத்தீர்ப்பானது திரு. துரைசிங்கத்தைத் தாண்டி வெவ்வேறு நாட்டுப் பின்னணிகளிலிருந்து வரும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கும் கூட மிகவும் தீவிரமான பின்விளைவுகளைக் கொண்டிருக்கிறது. நீதிமுறை மேலாய்வின் ஆற்றலைக் குறைப்பதன் மூலம் சர்வாதிகாரத்தை முன்னெடுக்க சாதகமாகவும், ட்ரம்ப் நிர்வாகத்துக்கு பெரியதொரு வெற்றியாகவும் இது அமைகிறது.

Implications For Asylum & Dissent

தஞ்சத்துக்கும் எதிர்ப்புக்குமான உட்கிடைகள்

The U.S. Supreme Court decision in DHS v. Thuraissigiam sets a dangerous precedent where an asylum seeker subjected to expedited removal has no recourse against a whim decision by a U.S. asylum officer or border patrol agent. It reverses settled law, stripping judicial oversight when it is most needed.[1] [2] [3] Because habeas petitions are a critical last resort, this decision impacts not only Sri Lankan Tamil asylum seekers but asylum seekers overall:

ஐக்கிய அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு முகவராலோ அல்லது தஞ்சக்கோரிக்கை அலுவலராலோ எடுக்கப்படக்கூடிய எதேச்சையான முடிவுகளுக்கு எதிராக விரைந்து நாடுகடத்தப்படவிருக்கும் தஞ்சக்கோரிக்கையாளர் எதுவும் செய்யமுடியாதென நிறுவும் ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த டி.எச்.எஸ் எதிர் துரைசிங்கம் உச்சநீதிமன்றத் தீர்ப்பு. நீதிமுறை மேலாய்வு எங்கு, அப்போது தேவைப்படுகிறதோ, அங்கேயே அதை இல்லாமல் செய்வதன் மூலம் வழக்காகியிருக்கும் சட்டத்தை பின்திருப்பும் கைக்கரியத்தை இது செய்கிறது. ஏனெனில், ஆட்கொண்டர்வு மனு என்பதை மிக முக்கியமான இறுதி வழி, எனவே இதனால் இலங்கையைச் சேர்ந்த தஞ்சக்கோரிக்கையாளர்கள் மட்டுமன்றி சகல பின்னணிகளைக் கொண்டோரும் பாதிப்புறுகிறார்கள்.

●Errors in expedited procedures and credible fear judgments violate U.S. law and blatantly violate the international prohibition against forcible return to persecution (INA section 235(b) and Refugee Protocol, art. 33). These are risks faced en masse by many asylum seekers at the U.S. southern border.

● துரித வழிமுறை மற்றும் நியாயமான அச்சம் தொடர்பான முடிவுகளில் உள்ள வழுக்கள் ஐக்கிய அமெரிக்க குடியரசின் சட்டதிட்டங்களை அத்துமீறுவதோடு மட்டுமன்றி துன்புறுத்தலைச் சந்திக்கும் முகமாக வலிந்து நாடுகடப்பதப்படுவதற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சர்வதேச சட்டவிதி 235 (b) மற்றும் அகதி நெறிமுறைக் கூறு 33 போன்றவற்றை அப்பட்டமாக உதாசீனம் செய்கிறது. இந்த ஆபத்தை ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு எல்லைகளில் பெருந்தொகையானோர் எதிர்கொள்கிறார்கள்.

● This Supreme Court decision joins other impediments to refugee protection in the U.S., including the proposal just days prior (June 15) of a new rule that would eviscerate the asylum system. These follow the 2018 executive order that first, limited asylum claims to authorized ports of entry, and, per CBP policy since 2016, turned away asylum seekers from ports of entry, requiring them to remain in Mexico while their cases undergo review and adjudication. Per the Southern Policy Law Center, “Asylum seekers are not safe in Mexico. Mexican authorities regularly detain asylum seekers and subject them to refoulement — deportation to countries where they face persecution — in violation of international law.”[1]

● உச்சநீதிமன்றின் தீர்ப்பானது ஐக்கிய அமெரிக்கக் குடியரசில் அகதிப் பாதுகாப்புக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் இதர தடைகளுடன் இணைந்துகொள்கிறது. இத்தீர்ப்புக்கு சில நாட்கள் முன்பாக (ஜூன் 15) தஞ்சக்கோரிக்கை ஏற்பாட்டையே இல்லாதொழிக்கும் புதிய சட்டப்பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த இரண்டுக்கும் முன்பே தஞ்சக்கோரிக்கைகளை சுங்க நுழைவாயில்களுக்கு மட்டுப்படுத்துகிற 2018 உயராணையும், நுழைவாயிலில் வைத்தே தஞ்சக்கோரிக்கையாளர்களை மெக்சிக்கோவுக்கு திருப்பி அனுப்பி, கோரிக்கைக்கான முடிவுத்தீர்மானம் எட்டப்படும் வரை அங்கேயே அவர்களைத் தங்கியிருக்கக் கட்டளையிடும் CBP கொள்கையும் நிகழ்ந்திருக்கின்றன. தெற்கு சட்டக் கொள்கை நிறுவனம் (சதேர்ண் பொலிசி லா செண்டர்) Southen Policy Law Centre சொல்வதன் படி: “தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு மெக்சிக்கோவில் பாதுகாப்பு இல்லை. மெக்சிக்க அதிகாரப் பட்டயங்கள் தஞ்சக்கோரிக்கையாளர்களை அடிக்கடி தடுத்து வைப்பதுடன் அவர்களை சொந்த நாட்டிற்கே கையளிக்கவும் செய்கிறார்கள். துன்புறுத்தப்படும் அபாயத்துக்கு ஏதிலிகளைத் திருப்பி அனுப்புவது சர்வதேசச் சட்டத்தை மீறும் செயலாகும்.1

The SCOTUS decision comes after the Trump administration proposed new federal regulations on June 15, 2020 redefining persecution and effectively ending asylum in the U.S. for thousands. Five devastating implications are listed below.

ஜூன் 15 அன்று புதிய கூட்டாட்சி (பெடரல்) விதிமுறைகளை ட்ரம்ப் நிர்வாகம் பிரேரித்ததை அடுத்தே SCOTUS தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. துன்புறுத்தலை மீள்வியாக்கியானம் செய்து, ஆயிரக்கணக்கானோருக்கு ஐக்கிய அமெரிக்க நாட்டில் தஞ்சக்கோரிக்கை ஏற்பாட்டையே இல்லாதொழிக்கும் இத்தீர்ப்பின் ஐந்து உட்கிடக்கைகளைக் கீழே பட்டியலிடுகிறோம்.

Disproportionate impact on Black and Indigenous migrants: These shifting dynamics negatively impact most asylum seekers regardless of nationality and background, however, the circumstances surrounding unjust asylum rejections disproportionately impact Afro-descendant, Indigenous, Latinx migrants who make up a significant proportion of U.S. asylum seekers. Haitian, Somalian, Mexican, and Central American Asylum Seekers face high asylum denial rates. Indigenous Asylum Seekers from Central America often lack proper translation and understanding of political context in their asylum processes. Indigenous and Black migrants face disproportionate burdens of detention and deportation due to existing structures of racial discrimination inherent in American policing and carceral systems. Additionally, Indigenous and Afro-descendant migrants often originate from countries the U.S. has favorable, exploitative, and/or extractive diplomatic ties with, limiting the willingness to accept migrant fears of persecution as credible. These underlying realities coalesce in such a way that the now normalized characteristics of Mr. Thuraisiggiam’s unfair treatment — from language injustice to inadequate knowledge of political context — will be exacerbated for Indigenous and Afro-descendant migrants.

கறுப்பு மற்றும் சுதேசிய குடியேறியோர் மீது அளவிற்கொவ்வாத பாதிப்பு: தேசிய இனம், பின்னணி என்று பாகுபாடுகளின்றி பெரும்பாலான தஞ்சக்கோரிக்கையாளர்களையும் எதிர்மறையாக இந்த நகர்வுகள் பாதிக்கின்ற போதும், இந்த நீதியற்ற தஞ்சக்கோரிக்கை நிராகரிப்புகளுக்குப் பின்னாலிருக்கும் சூழ்நிலை அளவுகணக்கற்ற வகையில் ஆப்பிரிக்க வழித்தோன்றல், சுதேசிய, மற்றும் லத்தீன் அமெரிக்கப் பின்னணி கொண்ட தஞ்சக்கோரிக்கையாளர்களையே கூடியளவு பாதிக்கிறது. ஹைற்றிய, சோமாலிய, மெக்சிக்க, மற்றும் மத்திய அமெரிக்கத் தஞ்சக்கோரிக்கையாளர்களே அதிகளவு நிராகரிப்பை எதிர்கொள்கிறார்கள். மத்திய அமெரிக்காவில் இருந்து வரும் சுதேசியத் தஞ்சக்கோரிக்கையாளர்களின் வழக்குகளின் போது பல சமயங்களில் போதுமான மொழிபெயர்ப்பு ஏற்பாடோ அல்லது அவர்களது அரசியல் பின்புலம் பற்றிய புரித்துணர்வோ இருப்பதில்லை. சுதேசிய மற்றும் கறுப்புத் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தடுப்புக்காவல் மற்றும் நாடுகடத்தலை அதிகளவில் எதிர்கொள்வதற்குக் காரணமாக அமெரிக்க காவல்துறை மற்றிம் சிறைச்சாலை அமைப்புகளில் நிறுவனமயமாகியிருக்கும் இனவெறிப் பாகுபாடுகள் அமைந்துவிடுகின்றன. மேலும் சொல்லப்போனால், ஐக்கிய அமெரிக்காவுக்கு எந்த நாடுகளுடன் சுரண்டல் நோக்கில் சிநேகபூர்வ இராஜதந்திர உறவுகளைப் பேணுகிறதோ — அந்த நாடுகளிலிருந்தே பெரும்பாலான சுதேசிய மற்றும் ஆப்பிரிக்க-வழித்தோன்றல் பின்னணி கொண்ட தஞ்சக்கோரிக்கையாளர்கள் வருவதுண்டு. அவர்களுடைய வாழ்வச்சம் குறித்த வாக்குமூலங்கள் நம்பகத்தன்மையற்றவையாகப் புறந்தள்ளப்படுவதற்கு மேற்சொன்ன அரசியல் பின்புலமும் மற்றொரு காரணமாகும். ஒன்றுபடும் இப்படியான பல காரணிகளின் சேர்க்கை திரு துரைசிங்கத்துக்கு வழங்கப்பட்ட அநீதியான தீர்ப்பில் இயல்பாக்கமடைந்திருப்பதை காண்கிறோம். மொழிரீதியான அநீதி, அரசியல் பின்புலம் பற்றிய உதாசீனம் என்கிற இரண்டுமே எதிர்காலத்தில் கறுப்பு மற்றும் சுதேசிய குடிபெயர்ந்தோருக்கெதிராக உக்கிரமடையும்.

Insurmountable barriers built into the June 15 proposal: The proposed rule builds on years of executive orders and regulations undermining principles of refugee protection and asylum. Under this proposal, which would change long-established definitions and standards, individuals will be sent back to persecution and harm, while non-refugees entitled to protection will be sent to places where they will face threat of torture and death. Per Human Rights Watch, the proposal “appears designed to create insurmountable procedural barriers, evidentiary burdens, and qualification standards” to target three groups: Central Americans fleeing gang violence; women fleeing domestic abuse; and lesbian, gay, bisexual and transgender (LGBT) people. That said, this regulation would set bars that would make it exceedingly difficult for all categories of people who qualify for and deserve asylum to be recognized as refugees and protected.”[2]

ஜூன் 15 பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள கடக்கமுடியாத தடைகள்: அகதிப்பாதுகாப்பு மற்றும் தஞ்சம் வழங்கலுக்கு ஏதிராகப் பல்லாண்டுகாலமாகக் கொண்டுவரப்பட்ட மேலாணைகள், விதிகள் மேலே புதிதாக இவ்விதி கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. பல காலமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் தரநிலைகளைகளையும் வரையறைகளையும் மாற்றியமைக்கப்போகும் இப் பிரேரணையின் கீழ், தனிநபர்கள் உயிராபத்துக்கும் துன்புறுத்தலுக்கும் திருப்பியனுப்பப்படுவார்கள். பாதுகாப்புத் தேவைப்படுகிற அகதியல்லாதோர் அவர்களுக்கு உயிராபத்து, சித்திரவதை, கொலை, மற்றும் துன்புறுத்தல் நேரக்கூடிய இடங்களுக்கு அனுப்பிவைக்கைப்படுவர். Human Rights Watch (மனித் உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு) சொல்வதன் படி, இந்தப் பிரேரணை “கடக்கமுடியாத சாட்சியச் சுமை, தகுதித் தரநிலைகள், மற்றும் நடைமுறைத் தடங்கல்களை உருவாக்கி” அதன்மூலம் முக்கியமாக மூன்று குழுக்களைக் குறிவைக்கிறது: குழு வன்முறையில் இருந்து தப்பி வெளியேறும் மத்திய அமெரிக்கர்கள்; வீட்டு வன்முறையிலிருந்து தப்பி வரும் பெண்கள்; LGBT தன்பால் சேர்க்கையாளர்கள் (லெஸ்பியன், கே), இருபால் சேர்க்கையாளர்கள் (பைசெக்ஸுவல்) மற்றும் திருநர்கள் (திருநங்கை, திருநம்பி). அதைக் கடந்தும், இந்த விதிமுறையானது தஞ்சக்கோரிக்கைக்குத் தகுதி பெற்று அகதி அந்தஸ்து பெறவேண்டிய எந்த ஒரு பின்புலத்தைச் சார்ந்த ஒருவருக்குமே மிகவும் கடினமான சிக்கல்களை முன்வைக்கிறது.2

Increasing denial rates due to inadequate officer knowledge: Asylum seekers like Mr. Thuraisiggiam are often denied due to issues such as insufficient language interpretation for their cases and U.S. asylum officers’ inadequate knowledge of the political contexts they are fleeing. Recently, the problems of inadequate officer knowledge and sensitivity have only gotten worse, as the Administration has begun assigning border patrol agents to do the initial asylum screening interviews previously done exclusively by asylum officers. As expected, denial rates are dramatically higher when border patrol agents screen for asylum, which only further underscores the harm caused by SCOTUS eliminating judicial review protections.

● அலுவலரின் உதாசீனத்தால் அதிகரிக்கும் நிராகரிப்பு விகிதம்: திரு துரைசிங்கம் போன்ற தஞ்சக்கோரிக்கையாளர்களின் கோரிக்கைகள் போதிய நேரடி மொழிபெயர்ப்பின்மை, தப்பி வெளியேறும் அரசியல் பின்னணிகள் குறித்த அறிவீனம் ஆகிய காரணங்களாலேயே நிராகரிக்கப்படுவதுண்டு. அண்மைக்காலமாக இந்த அலுவலர் அறிவீனம், உதாசீனம் சார்ந்த பிரச்சனைகள் மோசமாகி வருகின்றன. முன்னைய காலங்களில் தஞ்சக்கோரிக்கை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை நேர்காணல்களைச் செய்வதற்கு நிர்வாகம் எல்லைக்காவலர் முகவர்களைப் புதிதாகப் பணித்திருப்பது இதன் பின்புலமாகும். எதிர்பார்க்கக்கூடியது போலவே, இந்த எல்லைக்காவலர்களால் தனித்து நடாத்தப்படும் ஸ்க்ரீனிங் நேர்காணல் நிராகரிப்பு விகிதாசாரம் மிக அதிகம். SCOTUS நீதிமுறை மேலாய்வுப் பாதுகாப்புகளை இல்லாதொழிப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை இது அடிக்கோடிடுகிறது.

Unprecedented increase in “expedited removals”: Worse still, unprecedented numbers of people may soon face the threat of “expedited removal,” putting them on the same potential path as Mr. Thuraissigiam. Under a federal rule that took effect in late June 2020, ICE plans to exercise expedited removal nationwide, effectively allowing for deportation without a hearing unless someone passes the same initial screening interview where Mr. Thuraissigiam was denied his chance to seek asylum. ICE is intending to use expedited removal on anyone who can’t prove they’ve been in the U.S. for at least two years — whereas before, it was only applied to people very near the border who had very recently crossed.

● “துரித நாடுகடத்தல்”களின் முன்னெப்போதுமில்லாத அதிகரிப்பு: இன்னும் மோசமாக, திரு. துரைசிங்கத்துக்கு நேர்ந்த அதே கதியின் பாதையில், முன்னெப்போதுமில்லாத எண்ணிக்கையில் மக்கள் “துரித நாடுகடத்தல்” அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்கூடும். ஜூன் 2020 இறுதியில் அமலாக்கப்பட்ட கூட்டாட்சி விதிமுறை ஒன்றின் கீழ், ICE நாடளாவிய நீதியில் துரித நாடுகடத்தல்களை முன்னெடுக்கத் திட்டமிடுகிறது. திரு. துரசிங்கத்துக்கான தஞ்சக்கோரிக்கை வாய்ப்பு மறுக்கப்பட்டதைப் போலவே முதல் ஸ்க்ரீனிங் நேர்காணலைத் தாண்டிச் செல்ல முடியாத பலரையும் வழக்கு விசாரணையின்றி துரித நாடுகடத்தல் வழிமுறைக்குள் தள்ளுகிறது. குறைந்தது இரண்டு வருடங்களாவது ஐக்கிய அமெரிக்காவில் வதிந்து வருவதை நிரூபிக்க முடியாத எல்லோரையும் துரித திருப்பியனுப்புதலுக்கு ஆளாக்க ICE திட்டமிட்டிருக்கிறது. முன்பு, இச்சட்டம் மிக அண்மைக்காலம் வரை எல்லை கடந்தோருக்கு மட்டுமே பொருந்துவதாக இருந்து வந்தது.

Denial of basic rights and impact on American dissent: In their decision, the Supreme Court majority looked to Congress’ passage of a 1996 act to justify its ruling denying migrants a right to be heard in federal court. Immediately, on June 26, Trump signed the executive order sending the Department of Homeland Security and other federal agencies to arrest protestors in cities across the U.S. The connection between a denial of basic rights to noncitizens and the next-day denial of basic rights to citizens is obvious and already in motion. Since the executive order, reports confirm that demonstrators such as in Portland, Oregon have been subject to federal agents employing violent and constitutionally dubious tactics such as firing munitions into crowds and kidnapping protestors via unmarked vans.

அடிப்படை உரிமைகளை மறுத்தலும் அமெரிக்க எதிர்ப்பியக்கம் மீதான பாதிப்பும்: உச்ச நீதிமன்று அதன் தீர்ப்பில் 1996 சட்டவிதியில் காங்கிரஸினுடைய பந்தியொன்றைப் பாவித்து கூட்டாட்சி நீதிமன்றில் குறியேறியோரியோரின் வழக்கு கேட்கப்படுவதற்கு இருக்கும் உரிமையை நிராகரித்துத் தீர்ப்பு வழங்கியிருந்தது. உடனடியாகவே, ஜூன் 26 அன்று, உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் முதலான கூட்டாட்சி முகாமைகளுக்கு அமெரிக்க நகரங்களில் எதிர்ப்பில் ஈடுபடுவோரைக் கைது செய்யும் மேலாணையை ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்திருந்தது. குடியுரிமையற்றோரின் அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கும், அடுத்த நாளே குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்குமான தொடர்பு மிகத்தெளிவானது மற்றும் ஏற்கனவே முன்னகர்வில் இருப்பது. மேலாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து வரும் செய்தியறிக்கைகைகளில் போர்ட்லண்ட் (ஒரிகன்) போன்ற இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் மீது வன்முறையும், கூட்டங்கள் மீது சன்ன வீச்சு, எதிர்ப்பாளர்களை அடையாளம் குறிக்காத வாகனங்களில் கடத்திச்செல்வது போன்ற அரசியலமைப்பு யாப்பை உதாசீனப்படுத்தும் தந்திரங்களையும் காணலாம்.

Cultural & Political Context to the Case

வழக்கின் கலாச்சார மற்றும் பண்பாட்டுப் பின்புலங்கள்

Due to the 1996 law targeting those detained close to the border, Mr. Thuraissigiam’s asylum request was considered under “expedited removal.” Mr. Thuraissigiam is of the historically persecuted ethnic Tamil minority group. Hundreds of thousands of Tamils have fled Sri Lanka due to persecution and atrocities committed prior, during, and after the Sri Lankan Civil War. Persecuted Tamil asylum seekers are targeted for multiple and often intersecting reasons related to minority ethnic status, caste, religion, sex, and sexuality. Multiple forces enact this targeting including state, militant, chauvinist and extralegal entities. Panchamar/Dalit and caste oppressed Tamils in particular are most impacted by these actors.

எல்லைக்கு அருகாமையில் வைத்துத் தடுப்புக்காவலிடப்படுவோரை இலக்கு வைக்கும் 1996 சட்டவிதி ஒன்றின் காரணமாக, திரு. துரைசிங்கத்தின் கோரிக்கை ‘துரித நாடுகடத்தல்’இன் கீழ் பரிசீலிக்கப்பட்டது. திரு. துரைசிங்கம் இலங்கையில் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட தமிழ் இனச்சிறுபான்மைக் குழுவைச் சார்ந்தவர். இலங்கைச் சிவில் யுத்தத்தின் போதும், அதற்கு முன்னரும் பின்னருமாக நீளும் துன்புறுத்தல்கள் கொடூரங்களில் இருந்து நூறாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார்கள். துன்புறுத்தப்பட்ட தமிழ் தஞ்சக்கோரிக்கையாளர்கள் சிறுபான்மை இன, சாதி, மத, பால் மற்றும் பாலீர்ப்புசார் பல்வேறு ஒன்றிணைந்த காரணங்களுக்காக இலக்கு வைக்கப்படுவதுண்டு. அரசு, சட்டத்துக்கு மேலதிகமான இராணுவ மேலாதிக்கவாத உருக்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரங்கள் இந்த இலக்குவைப்பில் ஈடுபடுகின்றன. பஞ்சமர்/தலித் மற்றும் சாதி ஒடுக்குமுறைக்காளான தமிழர்கள் இன்னும் மேலதிகமாக இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.

In Sri Lanka, Mr. Thuraissigiam was abducted in a van, beaten, and tortured before he escaped. Such van abductions by the Sri Lankan state are well-documented abuses against Tamils and dissenters, contributing to Sri Lanka’s overwhelming number of disappearances before, during, and after the war. Despite only having a population comparable to metropolitan New York City, according to Amnesty International, “Sri Lanka has one of the world’s highest number of enforced disappearances, with a backlog of between 60,000 and 100,000.”[3]

இலங்கையிலிருந்து தப்பி வெள்யேறுவதற்க்கு முன்பாக, திரு. துரைசிங்கம் வாகனத்தில் கடத்தப்பட்டு அடி, உதை, சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இந்தவகையான இலங்கை அரசால் நிகழ்த்தப்படும் வான் வாகனக் கடத்தல்கள் நன்றாகவே ஆவணப்படுத்தப்பட்ட தமிழர் மற்றும் மறுத்தோடிகளுக்கெதிரான துஷ்பிரயோகங்களாகும். இவை இலங்கையில் போரின் போதும், அதற்கு முன்னரும் பின்னருமாகச் சேர்த்து காணாமலாக்கப்பட்டிருப்போரின் அபரிமிதமான எண்ணிக்கைக்கு வழிவகுத்திருக்கின்றன. நியூ யோர்க் மெட் ரோபொலிட்டன் பகுதியின் மொத்த சனத்தொகையோடு ஒப்பிடக்கூடியதேயளவான சனத்தொகையைக் கொண்டிருந்தும், அம்னெஸ்டி இண்டர்னாஷனலைப் பொறுத்தவரை “இலங்கை, 60,00க்கும் 100,000க்கும் இடைப்பட்ட பதிவுகளுடன், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொகையில் உலகளாவிலேயே முன்னணி நிலைகளில் ஒன்றாக இருக்கிறது.”3

Even though the Sri Lankan Civil War came to an end in 2009, targeted persecution of ethnic, caste, sex, sexuality, and religiously oppressed peoples persists. Decades of persisting violence have been devastating for the island nation. Human rights defenders and victims of past abuses remain subject to threats, intimidation, surveillance, and torture facilitated by Sri Lanka’s draconian Prevention of Terrorism Act. Recently, Human Rights Watch (HRW) stated that “respect for fundamental human rights in Sri Lanka fell in serious jeopardy following Gotabaya Rajapaksa’s election as president in November 2019.”[4]

இலங்கையில் யுத்தமானது 2009இல் ஒரு முடிவுக்கு வந்தபோதும்கூட, இன, சாதி, பால், பாலீர்ப்பு மற்றும் மதரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிவைத்துத் துன்புறுத்தும் செயல்கள் தொடர்ந்து வருகின்றன. தசாப்தகாலங்களாக நீடிக்கும் வன்முறையானது இத்தீவு நாட்டை சீரழித்து வந்திருக்கிறது. மிக்க அண்மையில், முஸ்லிம்களுக்கெதிரான வன்முறையும் வெறுப்பும் அதிகரித்து வருகிறது. மனித உரிமைகளுக்காகப் பாடுபடுவோர், மற்றுத்தோடிகள் மற்றும் கடந்தகாலத்தில் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்பட்டவர்கள் போன்றோர் இன்னமும் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், கண்காணிப்பு மற்றும் சித்திரவதைக்கு இலக்காகிவருகிறார்கள். ‘நவம்பர் 2019இல் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச தெரிவானதையடுத்து அடிப்படை மனித உரிமைகள் மீதான மதிப்பு மிகவும் தீவிரமான இடருக்குள் வீழ்ந்திருக்கிறது’ என Human Rights Watch (HRW) அண்மையில் தெரிவித்திருக்கிறது.

In January 2020, President Rajapaksa callously stated that people who disappeared during the Sri Lankan Civil War are dead. This coded language implied that investigations into missing persons are not necessary, taking Sri Lanka many steps backward in achieving justice and healing while atoning for prior atrocities. Furthermore, he mobilized his right-wing majoritarian base of support, who view ethnic, linguistic, and religious parity and co-existence as threats to Sri Lanka’s national sovereignty and proclaimed identity as a Sinhala-majority Buddhist nation. On August 5, 2020 the Rajapaksas’ political party achieved a landslide victory in Sri Lanka’s parliamentary elections, securing the majority needed to fulfill a campaign promise to amend the constitution in such a way that strengthens executive power. These recent developments risk permanently entrenching dynastic and authoritarian governance on the island.

யுத்தத்தின் போது காணாமலாக்கப்பட்டவர்கள் இறந்துபோயிருப்ப்பார்களென இரக்கமில்லாதமுறையில் ஜனவரி 2020இல் ஜனாதிபதி ராஜபக்ச கருத்துத் தெரிவித்திருந்தார். காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் அநாவசியமென்று இக்கூற்று மறைமுகமாக நிறுவி, இலங்கையில் நீதி, செப்பமுறல், குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் போன்றவை நோக்கிய பயணத்தை பின்னிழுத்து விடுகிறது. இதைவிடவும், இன, மொழி மற்றும் மத சமத்துவத்தையும், கூட்டிருப்பையும் இலங்கையின் இறையாண்மைக்கும் சிங்களப்பெரும்பான்மை பௌத்த தேசமாகச் சொல்லப்படும் அடையாளத்துக்கும் வந்துசேர்ந்த அச்சுறுத்தல்களாகக் கருதும் தன்னுடைய வலதுசாரி, பெரும்பான்மைவாத ஆதரவுத்தளத்தை ராஜபக்ஸ முடுக்கிவிட்டிருக்கிறார். ஆகஸ்ட் 5, 2020 அன்று ராஜபக்சக்களினுடைய அரசியல் கட்சி இலங்கைப் பாரளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறது. நிறைவேற்று அதிகாரத்தைப் பலப்படுத்தும் அரசியலமைப்புச் சட்ட மாற்றங்களைக் கொண்டு வருவோம் என்ற அவர்களது தேர்தல் பிரச்சார வாக்குறுதியை நிறைவேற்றத் தேவையான பெரும்பான்மை அவர்களுக்கு இத்தேர்தலில் கிட்டியிருக்கிறது. இந்த அண்மைய நகர்வுகள் அத்தீவில் வம்சாவளிப் பேரரசு மற்றும் சர்வாதிகார ஆட்சியை நிலைநாட்டும் அபாயத்தைக் கொண்டிருக்கின்றன.

While the U.S. often recognizes genuine concerns of Tamils fleeing Sri Lanka, Tamils have historically faced obstacles seeking asylum in the US. These obstacles include inadequate language interpretation, a system unfamiliar with Sri Lanka’s political context, and strict immigration policies that favor the U.S. government’s supportive relationship with the Government of Sri Lanka. These barriers have resulted in a much smaller and more dispersed U.S. Tamil population than in Canada or Europe. In Canada, Europe, and other regions, such unjust asylum decisions have been met by significant local community responses. However, for Tamils seeking refuge in the United States, an anemic local support system provides an easy win for an administration seeking to eviscerate the asylum system.

இலங்கையிலிருந்து தப்பி வெளியேறும் தமிழர்களிந் நியாயமான அச்சங்களை ஐக்கிய அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ள போதும், தமிழர்கள் இங்கே தஞ்சம்கோருவதில் வரலாற்று ரீதியாகத் தடைகளை எதிர்நோக்கி வர்ந்திருக்கிறார்கள். இலங்கையின் அரசியல் பின்புலங்களுடன் பரிச்சயமற்ற அமைப்பு, இலங்கை அரசுடன் ஆதரவு உறவைப் பேணும் ஐக்கிய அமெரிக்க அரசின் குடிவரவுக் கொள்கைகள் இரண்டுமே இத்தடைகளில் அடங்குவன. கனடா அல்லது ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில், ஐக்கிய அமெரிக்காவில் குறைந்தளவானதும் சிதறுண்டதுமான தமிழ்ப் பிரசன்னத்துக்கு இத்தடைகளே காரணம். கனடா, ஐரோப்பா மற்றும் இதர பிரதேசங்களில் நீதிக்குப் புறம்பான தஞ்சக்கோரிக்கைத் தீர்மானங்கள் குறிப்பிட்டுச்சொல்லக்கூடியளவுக்கு வலுவான உள்ளூர்ச்சமூகத்தின் எதிர்வினைகள்ளை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. ஆனால், ஐக்கிய அமெரிக்காவில் தஞ்சம் கோரும் தமிழர்களுக்கோ, மிகவும் பலமற்ற உள்ளூர் ஆதரவு அமைப்புகள் தான் வாய்ப்பதுண்டு. இந்நிலை தஞ்சக்கோரிக்கை ஏற்பாட்டையே இல்லாதொழிக்க முனையும் நிர்வாகத்துக்கு வெற்றியை ஈட்டித்தருகிறது.

The SCOTUS decision recognized Mr. Thuraissigiam’s need of protection even though they did not permit any relief, underscoring that the final outcome of the case will be catastrophic for many people fleeing persecution.

திரு. துரைசிங்கத்துக்கு பாதுகாப்புத் தேவைப்படுகிறது என்பதை ஏற்றுக்கொண்ட அதேவேளை, SCOTUS தீர்ப்பானது எவ்வித நிவாரணங்களையும் அனுமதிக்கவில்லை. இவ்வழக்கின் இறுதி முடிவு துன்புறுத்தலில் இருந்து தப்பி வெளியேறும் பல மக்களுக்கு பெருங்கேடு விளைவிப்பதாக அமையப்போகிறது என்பதை இது அடிக்கோடிடுகிறது.

Demands: Halt Deportations, Defund, Invest

கோரிக்கைகள்: திருப்பி அனுப்புவதை நிறுத்துவோம், நிதிவழங்கலை நிறுத்துவோம், முதலீடு செய்வோம்

Within the current hostile political environment targeting immigrants, we cannot trust ICE, CBP, the courts, or the asylum system to uphold the ethical responsibility articulated in the 1980 Refugee Act to ensure the safety of people fleeing persecution.

குடியேறியோரை இலக்குவைக்கும் பகையுணர்வுமிக்க சமகால அரசியல் சூழலில், ICE, CBP, நீதிமன்றுகள், அல்லது தஞ்சக்கோரிக்கை அமைப்பு போன்றவை துன்புறுத்தலில் இருந்து தப்பி வெளியேறுவோரைப் பாதுகாப்பதை உறுதிசெய்யவென 1980 அகதிச் சட்டமூலத்தில் சொல்லப்பட்டிருக்கும் அறம்சார் பொறுப்புகளைத் தூக்கிநிறுத்தும் என்று நாம் நம்பிக்கை கொள்ளமுடியாது.

The only ethical option within this context is to free all people from detention, halt all deportations, and defund law enforcement.

தெரிவு தடுப்பில் வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவித்து, எல்லா நாடு-திருப்பியனுப்புதல்களையும் நிறுத்தி, சட்ட அமுலாக்கல் துறைகளுக்கு வழங்கப்படும் நிதிக்கொடுப்பனவை ரத்துச்செய்தலுமே இந்தச்சூழலில் எம்முன்னிருக்கிற ஒரேயொரு அறம்சார் தெரிவு.

By taking steps to defund law enforcement agencies (including but not limited to ICE, DHS, and CBP), Congress can help ameliorate the unjust targeting of migrant communities and funds can be reallocated towards initiatives ensuring greater safety for all people enduring and escaping violence.

சட்ட அமுலாக்கல் நிறுவனங்களுக்கு (ICE, DHS, CBP உள்ளடங்கலாக மேலும் பல) செல்லும் நிதியை இரத்துச்செய்வதற்கான படிகளை எடுத்துவைப்பதன் மூலம், குடியேறிய சமூககள் மீதான அக்கிரம இலக்குவைப்பைத் தடுக்கவும், வன்முறையை அனுபவிக்கும், தப்பிப்பிழைக்கும் மக்களின் மேன்மையான பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் நோக்கி அந்த நிதியைத் திசைதிருப்பவும் காங்கிரசால் முடியும்.

For general inquiries, contact: ilaneer@proton.ch

For press inquiries, contact: maynmai@protonmail.com

பொதுவான தொடர்புகளுக்கு: ilaneer@proton.ch

ஊடகத் தொடர்புகளுக்கு: maynmai@protonmail.com

[1] “CBP Turnbacks of Asylum Seekers at U.S. Ports of Entry,” Southern Poverty Law Center, Fall 2018, link

[2] Lauren Alder Reid, “Comment on proposed changes to procedures for asylum and withholding of removal; credible fear and reasonable fear,” Human Rights Watch, 7/15/20, link

[3] “Sri Lanka: Fulfil the demands of the families of the disappeared,” Amnesty International, 2/14/20, accessed 8/5/20, link

[4] “Sri Lanka,” Human Rights Watched, accessed 8/5/20, link

--

--

Maynmai

We are a Tamil-led, multi-ethnic, multi-racial formation responding to attacks on asylum.